swiss time

weltrekord

↑ Grab this Headline Animator

«Hoffnung für Frieden zwischenHindus, Muslimen, Buddhisten und Christen Sri Lanka».

Rev.David Jayanadan Appukutti


Donnerstag, 17. Juli 2014

கிறிஸ்தவ மாற்றம்

                                    

                            Tamil Songs

                                    

                           

                        Malayalam Songs
                                      

කතෝලික සභාව
ஊரே மாற்றம்.. ஊரே மாற்றம்..

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 அக்டோபர், 2010 - பிரசுர நேரம் 14:18 ஜிஎம்டி
bbc in tamil 

கிறிஸ்தவ மாற்றம்

இங்கிலாந்தின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊருடைய ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சமூகம் மொத்தமும் போப்பாண்டவர் வழங்கிய திருச்சபை மாற்ற யோசனையை ஏற்று ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுகின்றனர்.

ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்கள் ஆயர்களாக வருவதை அனுமதிப்பதென்கிற திருச்சபை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஃபோக்க்ஸ்டோன் நகரில் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த புனித பீட்டர்ஸ் தேவாலயத்து பக்தர்கள் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுவதை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

ஆங்கிலிக்கன் திருச்சபையில் 1994ஆம் ஆண்டு முதல்பெண்கள் மதகுருக்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தற்போது பேராயர்கள் கூட ஆகலாம் என்று அத்திருச்சபையின் மேலிடம் முடிவுசெய்துள்ளது.

பெண்களை ஆயர்களாக நியமிப்பது என்ற ஆங்கிலிக்கன் திருச்சபையின் இந்த முடிவோடு உடன்பட முடியாத அத்திருச்சபையின் பக்தர்கள், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறிவருவார்களானால், அவர்கள் ரோமன் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தபடியே ஆங்கிலிக்கன் திருச்சபை வழக்கங்களில் சிலவற்றை அவர்கள் தொடர இடமளிக்கப்படும் என்ற ஒரு விசேட அனுமதியை போப்பாண்டவர் பெனடிக்ட் சென்ற வருடம் வழங்கியிருந்தார்.

போப்பாண்டவர் இப்படி கூறியது சர்ச்சையை உருவாக்கியது. ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து பெருமளவானோர் மாறுவதற்கு இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த ஒரு தேவாலயத்தின் பக்தர்கள் மொத்தமும் ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து விலகி ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுவதென்பது இப்போது ஃபோக்ஸ்டோனில்தான் முதல் முதலாக நடக்கிறது.

ஃபோக்ஸ்டோனில் உள்ள புனித பீட்டர் தேவாலயம் கேட்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸுடைய மறைமாவட்டத்தின் கீழ் வருகிறது.

பக்தர்கள் ஒட்டுமொத்தமாக மாறுகிறார்கள் என்றாலும் அவர்கள் தங்களுடைய தேவாலயத்தை ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு கொண்டுசெல்ல முடியாது என்றே தெரிகிறது.

இதனிடையே ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்கள் ஆயராக்கப்படுவதை ஏற்காத டிரடிஷனலிஸ்ட் பிரிவைச் சேர்ந்த லண்டன் ஆயர் ஒருவர் தானும் அங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாற எண்ணம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆங்கிலிக்கன் திருச்சபை மேலிடமானது பெண் ஆயர்களை டிரடிஷனலிஸ்ட்டுகள் மீது திணிக்கப்பார்க்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் நிர்வாகக் குழுவுக்கு அண்மையில் நடந்த தேர்தலில் டிரடிஸனலிஸ்ட் பிரிவினர் அதிகம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் ஆயர்கள் ஆவதை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை தம்மால் தடுத்து நிறூத்திவிட முடியும் என்று டிரடிஷனலிஸ்ட்டுகள் கூறுகின்றனர். ஆனால் பெண் ஆயர்கள் வருவதை ஆதரிப்பவர்களோ இக்கூற்றை மறுக்கின்றனர்.

Singhala Songs 




                                                      

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Translate

Powered By Blogger

Beliebte Posts

https://plus.google.com/+DavidJayanadanAppukutti/posts