swiss time

weltrekord

↑ Grab this Headline Animator

«Hoffnung für Frieden zwischenHindus, Muslimen, Buddhisten und Christen Sri Lanka».

Rev.David Jayanadan Appukutti


Dienstag, 13. Januar 2015

போப்பாண்டவர்



அருமையானவர்களே !


 நான் ஒரு கத்தோலிக்கன் அல்ல
  கத்தோலிக்கன்  அல்லாத  சுதந்திரமான கிறிஸ்தவன்  என்பதன் காரணத்தால்  , 
இந்த வலைப் பதிவை  பதிவு செய்கின்றேன்  மொழி /இன /மத  வேறுபாடின்றி    நல்ல பண்பாடான , 
 மனிதனை மதிக்க தெரிந்த மனிதனாக  நாமும் வாழ்வோம்  பாப்பரசர்  நமக்கு எல்லோருக்கும் உதாரணம் .

 tamilnews

நிற வேறுபாட்டினை  ஒதுக்கி  தள்ளுவோம் 
எல்லோரும் ஒரே  மனிதன் என நினைப்போம் 


பாப்பரசர்  விடும் சமாதானத்துக்கான  வெண் புறா 
என்றும் நமது இருதயத்திலும்  இருக்கட்டும் 
கிறிஸ்தவன்  என்று  பெருமை கொள்ள முன் 
நல்ல  மனிதனாக  உள்ளத்திலும்  உலகிற்கும்  காட்டுவோம் 
பாப்பரசரே  உங்களுக்கு ஆண்டவர் நீடித்த  ஆயுளை  தருவாராக ! 
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி ,சுவிஸ் 14.01.2015

உங்களுட்கு மிகுந்த  சமாதானமும்
இறைவனின் அன்பும்  இலங்கை அனைத்து மக்களுட்கும் உண்டாவதாக !
 கடந்த காலங்களில் தமிழ் சிங்கள மக்களுட்கு ஏற்பட்ட  மனநோவுகள் கசப்புக்கள் இழப்புக்கள் பிரிவுகள்   அனைத்தையும் நான் நன்கு அறிவேன்  உங்கள் அனைவருக்கும் புதிய சமாதானமும் அன்பும் உண்டாக  நான் பிராத்திக்கின்றேன்
பரிசுத்த பாப்பரசர் 13,14, திகதிகளில் 2015  இலங்கையில் அவரின் சுருக்கமான கருத்து
                                                         

                                                     

                                                     
                                                         
புத்தமத நாடாக இருந்தாலும்  ஏனைய மதங்களையும் மதிக்க தெரிந்த சமூகமும் இன்னும் வாழ்கின்றது என்பதனை  இன்னொமொரு முறை நிருபித்து  காட்டி உள்ளது  போப்பான்டரின்  இலங்கைக்கான புதிய வருகை  2015


2015 புதிய ஆண்டில்  இலங்கை தேசத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் 
எல்லா தரப்புடனும்  ஒற்றுமையையும்  அன்பையும் ஐக்கியத்தையும்  விரும்புகின்றவர் 
இலங்கை மக்களின் அன்பைக் கண்டு வியர்ந்து போன பாப்பரசர்  2015 இல்  இலங்கையில் 

மிகுந்த அன்பு கொண்ட  ஜேசுக்கிறிஸ்றிதுவின் சீடர் 
சிறுவர்களை நேசிக்கும்  நிறைந்த அன்பு கொண்டவர் 







சிறந்த புத்திமான் அறிவாளி


இலங்கை தமிழர்களின் வாழிவில்  கடந்தகாலங்களில்  நடந்தேறிய  கசப்பான சம்பவங்களை நன்கு அறிந்தவர்


Donnerstag, 17. Juli 2014

Jesus - பாதிரியார்


                                                                       

கச்சதீவு வழக்கில் இருந்து தமிழக பாதிரியார் விடுதலை- சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த தாயும் மகளும் கைது
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 06:54.38 AM GMT ]tamilwin

தமிழக கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் கியூ பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து குறித்த பாதிரியார் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
2012 ஆம் ஆண்டு கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்றநிலையில் இலங்கைக்கு சென்ற கடைசி படகை தவறவிட்டு நிர்க்கதியாக இருந்த உஷா என்ற இலங்கை பெண் மற்றும் அவருடைய மகள் நிரா ஆகியோரை வணக்கத்துக்குரிய மைக்கல் ராஜ் என்ற பாதிரியர் தாம் சென்ற படகில் இராமேஸ்வரத்துக்கு அழைத்து சென்றார்.
இது தொடர்பில் அவர் உடனடியாக பொலிஸாருக்கும் அறிவித்திருந்தார். எனினும் கியூ பிரிவு காவல்துறையினர் குறித்த பாதிரியார் வெளிநாட்டவர்களை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனையடுத்து பாதிரியார் காவல்துறையினர் பணிப்பாளர் நாயகத்திடம் விடயத்தை கொண்டு சென்ற நிலையில் அவர் காவல்துறையினரின் குற்றச்சாட்டு விலகிக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
எனினும் இதற்கு மாறாக கியூ பிரிவினர் பாதிரியார் மீது வழக்கை தாக்கல் செய்தனர்.
இதனை ஆட்சேபித்து பாதிரியார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் நேற்று பாதிரியாரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது, அத்துடன் வழக்கையும் தள்ளுபடி செய்தது.


Published: Tuesday, April 20, 2010, 14:04 [IST] oneindia
ரோம்: 10 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட். இத்தாலியின் ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில் வசித்து வருகிறார். இவர் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை டேவிட் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் கியோவன்னி ஜெபியா கூறியுள்ளார். இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில் உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில் வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட் என்றார் ஜெபியா. கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து அக்கிரமம் செய்துள்ளார். அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது செய்யப்பட்டார். தற்போது தனது குற்றத்தை அவர் ஒத்துக் கொண்டதால் அவர் மீதான விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 1987ம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டவர் டேவிட். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு செயல்படத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை இந்தக் கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்றைக்கு நீ திடீரென்று மரித்தால், உன்ஆவி உன்னை விட்டுப் பிரிந்தால், உன் ஜீவன் உன்னில் இருந்து எடுக்கப்பட்டால், உன் உயிர் இன்றைக்குப் போனால், உன் ஆத்மா எங்கேபோகும்? நீ மோட்சம் போவாயா? நரகம் போவாயா? இதைக் குறித்து நீ ஒருபோதும் நினைத்திராமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு, உன்ஜீவனை தம் கையில் வைத்திருக்கும் தேவனுடைய சமூகத்தில் உன்னை நிறுத்தி, இதை வாசிக்கும் உன்னிடத்தில், இதை வாசிக்கும்உன்னிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இன்றைக்கு நீ மரித்தால், உன் ஆத்துமா எங்கே போகும்?

நீ மரிக்க மாட்டாயா? சுகமும் பலமும் இருக்கிறதென்று தேற்றிக் கொள்கிறாயோ? ஜாக்கிரதை. உன் சுகத்திற்கு ஒரு முடிவு வரும். உன்அழகுக்கு ஒரு முடிவு வரும். உன் ஆடம்பரத்திற்கு ஒரு முடிவு வரும். உன் படிப்புக்கு ஒரு முடிவு வரும். உன் உல்லாசத்திற்கு ஒரு முடிவுவரும். உன் வாலிபத்திற்கு ஒரு முடிவு வரும். உன் ஷோக்குக்கு ஒரு முடிவு வரும். உன் ஆடம்பரத்திற்கு ஒரு முடிவு வரும். உன் குடும்பவாழ்க்கைக்கு ஒரு முடிவு வரும். ஒருவேளை அது இறைக்கே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இருக்கலாம். உன் வாழ்நாள் கொஞ்சமே, உன்ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம் தோன்றி பின்பு தோன்றாமல் புகைகின்ற புகையைப்போல் இருக்கிறது.” (யாக்கோபு.4:14).

ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்துஅறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அதுவெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டைமண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின்ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச்சுவறிப்போகிறதுபோல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான்; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்துவிழிக்கிறதும் இல்லை” (யோபு.14:1,2,7-12).

நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்குஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலேஅறுப்புண்டு உலர்ந்துபோம்” (சங்கீதம்.90:3,5,6).

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரேயர்.9:27).

இந்த வேதவசனங்களின்படி உன் வாழ்நாள் நிலையற்றதாயிருக்கிறது. நீ நினையாத நேரத்தில், மரணம் உன்னைப் பிடிக்கும். நீ பாவத்தில்வாழ்ந்து, பாவியாய் மரித்தால், நிச்சயமாய் நரகம் போவாய். அங்கே அக்கினி அவியாமலும், புழு சாகாமலும் இருக்கும். அது கந்தகமும்அக்கினியும் எரிகிற கடல். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும். அது புறம்பான இருள். நீ பாவியாய் மரித்தால், இந்த இடத்திற்குத்தான்போவாய். நீ மோட்சம் பரலோகம் போக வேண்டுமென்றால், உன் பாவங்களில் இருந்து விடுதலை, இரட்சிப்பு அடைய வேண்டும்.

நீ பாவியாய் மரிப்பதில், இயேசு இரட்சகருக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ?அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எசேக்கியேல்.18:23). நண்பனே, உன்னை பாவங்களில் இருந்து விடுவித்து, நரக தண்டனைக்கு உன்னை விலக்கி இரட்சிக்க இயேசு காயப்பட்டுரத்தம் சிந்தியிருக்கிறார். இயேசு மரித்திருக்கிறார். உன்னை இரட்சித்து, பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள்ள இயேசுஉயிரோடிருக்கிறார்! இந்த இயேசுவை, இன்றைக்கு நீ விசுவாசித்து, உன் இருதயத்திற்குள் விசுவாத்தால் ஏற்றுக் கொள். அப்பொழுது உன்எல்லா பாவங்களிலும் இருந்து விடுதலை பெற்று, பரலோகம் செல்வாய். நீ இயேசுவை வேண்டாம் என்று தள்ளினால், நீ நினையாத நேரத்தில்மரணம் உன்னை பிடிக்கும்போது, நீ மரித்து கீழே போவாய். ஆகையால் உன் இரட்சகர் இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்படியாகஅன்பாய் அவரிடத்தில் உன்னை இன்று அழைக்கிறோம். இயேசுவினிடத்தில் வா! நீ பரலோகம் போகலாம். இன்றைக்கு நீ மரித்தால் எங்கேபோவாய்?   திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ! பாம்பின் வாயில் தவளை போல,
பரிதவிப்பாய், பரிதவிப்பாய்!
 (பழைய கைப்பிரதி ஒன்றில் இருந்து)

SATURDAY, 21 DECEMBER 2013 20:04 TAMILCH

அழுத்தி தொடர்ந்து வாசிக்கவும் 

கிறிஸ்தவ மாற்றம்

                                    

                            Tamil Songs

                                    

                           

கத்தோலிக்க திருச்சபை-කතෝලික සභාව


jesu ,tamil , bible, singala, srilanka,


கத்தோலிக்கம்-catholics- Catholicism

கத்தோலிக்க திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.

கத்தோலிக்க திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.

இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.

கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.

ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட 'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.



இயேசுவின் தலைமைச்சீடர் புனித இராயப்பரின் சிலை
11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.

திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம் 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது.

டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.

முதலாம் வத்திக்கான் சங்கம் (1869-1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.


இரண்டாம் வத்திக்கான் சங்கம் ரோம் நகரில் 1962 முதல் 1965 வரை ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும்.

சங்கத்தின் பரிந்துரைப்படி கத்தோலிக்க சபை வழிபாடுகள் பெருமளவில் மாற்றப்பட்டன. லத்தீன் மொழி பலிப்பூசை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, புதிய பலிப்பூசை அவரவர் சொந்த மொழியில் நிறைவேற்ற ஆவன செய்யப்பட்டது. இதைத் தவிர வழிபாடுகளில் குரு (Priest) விரும்பினால் உள்ளூர் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பரப்பப் பட்டது. இதனை 'இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளி' யில் செய்வதாக அவ்வாறு செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர். (சங்க 'ஒளி' எனப்படுவது சங்க ஏடுகளில் எழுதி பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் அல்ல. மாறாக, அவற்றில் இருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்டதாக சொல்லப்படும் சார்பு கொள்கைகள். ஆனால், கத்தோலிக்க குருமாரிடையே இவை பற்றிய ஒருமித்த கருத்து இன்றளவும் இல்லை). எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையும் இச்சங்க 'ஒளி' யில் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். லத்தீன் மொழி பலிப்பூசையை பல விசுவாசிகள் விரும்பியதால் தற்போதய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இறை மக்கள் விரும்பினால் லத்தீன் மொழி பலிப்பூசையை வழங்கலாம் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

இச்சங்க கோட்பாடுகளைப் விரும்பாதவர்கள், பல்வேறு புராதன கத்தோலிக்க சபைகளை உருவாக்கியுள்ளனர். பேராயர் லெபபர் (Archbishop Marcel) உருவாக்கிய பத்தாம் பத்திநாதர் சபை இவற்றில் முக்கியமானது. இன்னும் சில கத்தோலிக்க பொதுமக்கள் கத்தோலிக்க வழிபாடுகளில் பக்தி குறைந்து விட்டது என்று பெந்தெகோஸ்தே சபைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 christian ,tamil, singala
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஜூலை, 2014 - 11:38 ஜிஎம்டி

BBC News
கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமார்களின் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே கவலை வெளியிட்டருந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற விதிமுறையை மாற்றுவதற்கான தீர்வுகள் உண்டு என்றும், அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது தனது வேலை என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.
இத்தாலிய செய்தித்தாளான லா ரிபப்ளிக்காவுக்கு அளித்த ஒரு பேட்டியில், பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் கத்தோலிக்கத் திருச்சபையை பீடித்துள்ள தொழுநோய் என்று ஃபிரான்சிஸ் கூறினார்.
பேராயர்களிலும், கார்டினல்களிலும் கூட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமாரிகளில் சுமார் இரண்டு சதவீதம் பேர் சிறார்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேவையான கண்டிப்போடு இப்பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தான் உறுதியுடன் இருப்பதாய் அவர் தெரிவித்துள்ளார்.



Montag, 14. Juli 2014

John யோவான்6:43-51


John யோவான்6:43-51

43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48 ஜீவ அப்பம் நானே.
49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

Translate

Powered By Blogger

Beliebte Posts

https://plus.google.com/+DavidJayanadanAppukutti/posts